மழை நீர் சேகரிப்பு - நமது தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைக்கான தற்சார்பு

 





வணக்கம்.  மழை நீர் என்பது இயற்கையின் பரிசு. நீரின்றி அமையாது உலகு என்பது திருவள்ளுவர் வாக்கு. அதை நாம் நன்கு சேமித்துப் பயன்படுத்த வேண்டும்.

இங்கே சில வழிகள் உள்ளன:

மழை நீர் சேகரிப்பு மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தலாம்.  இதிலிருந்து அவர்கள் போர்வெல் மற்றும் கிணறுகளில் இருந்து போதுமான தண்ணீரைப் பெறலாம். அதை விவசாயத்திற்காக  பயன்படுத்தலாம். நமது தண்ணீர் தேவைக்கான 

தற்சாற்பை மழைநீர் சேகரிப்பு மூலம் உருவாக்கலாம்.

தனி வீடுகளில் உள்ளவர்கள், அதன் கூரை கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ் அல்லது ஓடு என எந்த வகையானலும் குழாய்களைப் பயன்படுத்தி மழை நீரைச் சேகரித்து சம்ப் தொட்டியில்  கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும்.  சேகரிக்கப்பட்ட மழை நீரை துவைப்பது, குளிப்பது, வீட்டுத்தோட்டதிற்கு நீர் பாய்சுதல்  போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். ஓடுகள் மற்றும்  ஆஸ்பெஸ்டாஸ் கூரை உள்ள வீட்டிற்கு  மழைநீரை உலோக தகடுகள் கொண்டு சேகரித்து பின்னர் குழாய்களுடன் இணைக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழில்துறை, வணிக நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டால் மிகுந்த அளவில் மழை நீரை சேமிக்க முடியும்.

மழை நீர் சேகரிப்பின் மூலம் போர்வெல்லை ரீசார்ஜ் செய்யலாம்.

மிக முக்கியமாக, கற்கள், மணல் போன்றவற்றைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறையைத் தவிர, நீர் வடிகட்டலுக்கு  சமீபத்திய தொழில்நுட்பங்கள் உள்ளன. மழை நீர் வடிகட்டி (rain harvest filter) இப்போது கிடைக்கிறது. அதில் பல நிலை வடிகட்டுதல் அமைப்பு உள்ளது, மேலும் அவை மழை நீரை மிகவும் சிறப்பாக வடிகட்டுகின்றன. மழை நீர் என்பது தூய்மையான உன்னதமான நீர். 

மேல்நிலை தொட்டிகளில் சரியாக சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் குடிக்க இதைப் பயன்படுத்தப்படலாம். 

மழை நீர் வடிகட்டி


பல பகுதிகளில் நீர் பற்றாக்குறையை போக்க, குறிப்பாக கோடைகாலங்களில் மழை நீர் சேகரிப்பு  மிகவும் உதவும்.

சாத்தியமான இடங்களில், மழை நீர் சேகரிப்பு செய்யப்பட்டால், அது பல பகுதிகளில், குறிப்பாக  கடலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தைத் தடுக்கும்.  

மேலும் கடலுக்கு வீனாகச் செல்லும் அதிக அளவு  நீரை நாம் தவிர்க்கலாம்.

மழை நீர் சேகரிப்பு செய்து நமது நீர் தேவைகளை நாமே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைவோம்.

இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.

Comments