வணக்கம். இப்போதெல்லாம் பலர் கடன்களுடன் போராடுகிறார்கள். சில சமயங்களில் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது, அவசரகால சூழ்நிலைகளில் இது மிகவும் அவசியம். சிரமங்களைத் தடுக்க கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கவனம் தேவை.
கடன்கள், ஈ.எம்.ஐ. போன்றவற்றிலிருந்து விடுபட எனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கடன் இரண்டு வகைப்படும். ஒன்று நன்மை பயக்கும் கடன், மற்றொன்று மோசமான கடன். எடுத்துக்காட்டாக, ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவதற்காக அல்லது அதை மேம்படுத்துவதற்காக கடன் வாங்குவது ஒரு நல்ல கடன். வணிகத்தின் வெற்றியை மதிப்பீடு செய்து கடனை பெற வேண்டும். வணிகம் சரியாக நடந்தால் அதிக பணத்தை உருவாக்க முடியும். எனவே இது நன்மை பயக்கும்.
குழந்தைகளுக்கான கல்வி கடனும் ஒரு நன்மை பயக்கும் கடன். இது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு உதவும். ஆனால் இந்த வகையிலும் திருப்பிச் செலுத்தும் திறனை முதலில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
கார் , பைக், விலையுயர்ந்த மொபைல்கள், தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதன பெட்டி ஆகியவற்றை கடன் மற்றும் மாத தவணை முறை மூலம் வாங்குவது நிச்சயமாக நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
இதிலிருந்து விடுபடுவது எப்படி? கார், பைக் போன்ற பயன்பாடு தொடங்கப்பட்டவுடன் தேய்மானம் அடையும் பொருட்களை மாத தவணை முறையில் வாங்க வேண்டாம். செலவழித்த பணம் படிப்படியாக அதன் மதிப்பைக் இழக்கும்.
முந்தைய நாட்களில் மக்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லையென்றால் உடனடியாக வாங்குவதில்லை, அதற்கு பதிலாக அவர்கள் திட்டமிட்டு பணத்தை சேமித்து பின்னர் வாங்கினார்கள். இந்த காலத்துடன் ஒப்பிடும்போது அப்போது குறைவான கடன்கள் அவர்களுக்கு இருந்தன. நாம் இந்த முறையைப் பின்பற்றலாம். போதுமான பணத்தை சேமித்து பின்னர் ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
கிரெடிட் கார்டுகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
பொறுப்பற்ற செலவு மற்றும் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கிரெடிட் கார்டுகளைப் பெறுவது ஆகியவை முடிவற்ற பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும்.
வீட்டுக் கடனைப் பெறுவது நல்லது, ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பணத்தை மிச்சப்படுத்திய பின்னர் ஒரு வீட்டைக் கட்டுவது அல்லது வீடு வாங்குவது நல்லது. இது கடன் தொகை மற்றும் தவணை தொகையை குறைக்கும். வீடு என்பது நிதி திறனின் எல்லைக்குள் வாங்கப்பட வேண்டும் அல்லது கட்டப்பட வேண்டும். இதை செய்வது இனிய இல்லத்தை உருவாக்கும், அது ஒரு குறிப்பிடத்தக்க சொத்தாக இருக்கும்.
முக்கியமாக இப்போதெல்லாம் திருமணங்களின் போது பெரிய தொகையை செலவிடுவது அதிக அளவில் நடக்கிறது. தனது பொருளாதார சக்திக்கு மீறிய ஆடம்பர திருமண மண்டபம், மிக அதிக பதார்த்தங்கள் கொன்ட விருந்து மற்றும் மிக அதிக விருந்தினரை திருமண விழாவிற்கு அழைப்பது போன்றவற்றால் நிறைய பணம் செலவாகிறது. திருமணத்திற்குப் பிறகு பல வருடங்களுக்கு இது நிதிச்சுமைக்கு வழிவகுக்கும். பிறந்தநாள் மற்றும் பிற விழாக்கள் தற்போது செலவாகும் பணத்தின் அளவைக் கருத்தில் கொள்ளாமல் பகட்டான முறையில் நடைபெறுகிறது.
இதை கண்டிப்பாக கவனத்தில் கொண்டு நிதி வரையறைக்குள் திட்டமிட வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம், ஆனால் நிதிக் கல்வி (financial education) பெரும்பாலும் கற்பிக்கப்படுவதில்லை.
எதிர்கால தலைமுறைக்கு இது வழங்கப்பட வேண்டும்.
சம்பாதிப்பின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை பணத்தை மிச்சப்படுத்துவதும், பாதுகாப்பான முறைகளில் முதலீடு செய்வதும் பணத்தை அதிகரிக்கும்.
தானியங்களைச் சேகரித்து எதிர்காலத்திற்காக சேமிக்கும் பாடத்தை எறும்புகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் நாம் பணத்தை சேமித்து முதலீடு செய்து எதிர்காலத்தில் நமக்குத் தேவைப்படும்போது பணத்தை செலவிட வேண்டும்.
கடன் சுமை காரணமாக பல தற்கொலைகள் நிகழ்கின்றன. எனவே கடன் வாங்குவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.
கடனை வாங்குவதற்கு முன், கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், ஈ.எம்.ஐ.யில் பொருட்களை வாங்குவதற்கு முன் பல முறை சிந்தியுங்கள். கடன் சுமை மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது மற்றும் மகிழ்ச்சியைக் குறைக்கிறது.
கடன்கள் இல்லாமல் சுதந்திரம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ மனதில் வலுவான உறுதிப்பாடினை செய்ய வேண்டும்.
தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்
நன்றி.
Comments
Post a Comment