கோயில், இது வழிபாட்டுக்கான தலமா அல்லது வியாபாரத்திற்கான இடமா?






வணக்கம். பண்டைய மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தபோது, மின்னல், இடி, புயல் போன்றவற்றுக்கு பயந்தார்கள். ஆனால் காலை சூரியக் கதிர்கள் நீலக் கடலில் கண்கவர் அலைகளுடன் பிரதிபலிப்பதைக் கண்டபோது அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மனதிற்கு வலிமை அளிக்கவும், இடி, மின்னல் போன்ற இயற்கை சக்திகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும் அவர்கள் இயற்கையை வணங்கத் தொடங்கினார்கள். பின்னர் மக்கள் உலகில் மேலான, உயர்ந்த சக்தி உண்டு என்றும் அதை கடவுள் என்றும் அழைத்தனர். வழிபடுவதற்காக ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டது. அது மிகவும் எளிமையானது, அனைவரும் வழிபடலாம்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அதிகமான கோயில்கள் கட்டப்பட்டன. சில சிறியவை, சில மிகப்பெரியவை. பல்வேறு புராணங்களின் அடிப்படையில் பல கடவுள்களை வணங்கும் முறை தொடங்கியது. மக்கள் கோயில்களில் பூக்கள், பழங்கள், தேங்காய் போன்ற சிறிய காணிக்கைகளுடன் வழிபட ஆரம்பித்தனர்.

கோயில்களில் பூசாரிகள் பூஜை செய்யத் தொடங்கினர். மக்கள் வழிபடும்போது பூஜை செய்யும் கோயில் பூசாரிக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுக்கத் தொடங்கினர். காலப்போக்கில் ஒரு "உண்டியல்" ("ஹுண்டி" என்றும் உச்சரிக்கப்படுகிறது) கோயில்களில் ஒரு நன்கொடைப் பெட்டி வைக்கப்பட்டது.  இது பெரும்பாலும் உலோகத்தால் ஆனது, ஒரு பாதுகாப்பான பூட்டுடன் இருந்தது. அதில் மக்கள் நாணயங்கள், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக போடத்தொடங்கினர்.

மக்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு உதவ கடவுளை வழிபடுகிறார்கள். அப்போது அவர்கள் பூசாரிகளுக்கு பணம் தட்சனையாக கொடுக்கிறார்கள், மேலும் கோயில் உண்டியலிலும் பணத்தை அளிக்கிறார்கள். உண்டியலில் போடப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கும் கடவுளுக்கான பூஜைக்கும் பயன்படுத்தப்படும் என்று மக்கள் நம்பினார்கள். பிரபலமான பெரிய கோயில்களில் உண்டியல் மூலம் சேகரிக்கப்படும் பணம் மிகப்பெரியது. சில மாதங்களிலேயே  உண்டியிலில் பணம் பல கோடிகள் வரை சேர்கிறது. உண்டியலில் போடும் பணம் அனைத்தும் கடவுளுக்கும் கோவிலுக்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. மீதமுள்ள பணம் எங்கே செல்கிறது என்பது ஒரு பெரிய மர்மம். அதில் வெளிப்படைத்தன்மை இல்லை. கோயில் அதிகாரிகளோ அல்லது பூசாரிகளோ அதை வெளிப்படுத்துவதில்லை. 

இந்த நவீன உலகில், மக்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள், அவர்களின் விருப்பங்கள் ஏராளம். இப்போதெல்லாம் மக்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வருகிறார்கள். உண்டியலில் அதிக அளவு பணம் சேகரிக்கப்படுகிறது.  மக்களின் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை சமாளிக்க சிறந்த தலமாக சில கோயில்களுக்கு செல்ல உண்மையாகவோ அல்லது சுயநல நோக்கம் காரணமாகவோ சிலரால் பரிந்துரை செய்யப்படுகிறது. 

பக்தர்களின் நம்பிக்கையின் காரணமாக உண்டியல் மூலம் சேகரிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி கோயிலில் ஈடுபட்டுள்ள சிலருக்கு அவர்களின் தனிப்பட்ட வருவாய்க்காக செல்கிறது. பெரும்பாலான கோயில்களில் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பணம் ஏமாற்றப்பட்டு சுரண்டப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் குற்றமாகும்.

கோயில்கள் பக்தர்களுக்கு இலவச உணவை வழங்குகின்றன. சில கோயில்கள் சமூக நலனுக்காக பணத்தை செலவிடுகின்றன. அப்படியிருந்தும், செலவழிக்கப்பட்ட பணம் உண்டியலில் சேகரிக்கப்பட்ட தொகையை விட மிகக் குறைவு.

பல ஆண்டுகளுக்கு முன்பு சிலர் இந்து கடவுள்களை அடிப்படையாகக் கொண்டு பல கதைகளை உருவாக்கியுள்ளனர். பூஜை மற்றும் வழிபாடு அந்த புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக பூஜை செய்வதில் ஈடுபடுபவர்கள் ஒரு வாரத்தில் பெரும்பாலான நாள்கள் மற்றும் ஒரு மாதத்தில் பெரும்பாலான நாட்களை ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு பிரார்த்தனை செய்ய நல்லது என்பதற்கு காரணங்களை உருவாக்கியுள்ளனர். உதாரணம்: அம்மனுக்கு வெள்ளி கிழமைகள், சிவபெருமானுக்கு திங்கள்கிழமை, சனி பகவானுக்கு சனிக்கிழமை,  விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி, முருகனுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்றவை. மேலும் பவுர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, சஷ்டி இன்னும் பல. இவை அனைத்தும் அதிக மக்கள் கோயிலுக்கு வந்து அதிக பணம் பெறுவதற்கு செய்யப்படுகின்றன.  பல பண்டிகைகளும் பூஜை முறைகளும் அதற்காகவே உருவாக்கப்பட்டது. மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் இதை உருவாக்கிய சிலரின் நலனுக்காகவே. எல்லா நாட்களும் வழிபாட்டிற்கு நல்லது. கோயில் பூசாரிகளுக்கு சம்பளம் கிடைக்கிறது, எனவே அவர்களுக்கு தட்சனையாக பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அர்ச்சனை, சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் கூடுதல் பணம் பெறப்படுகிறது. மக்கள் பல விலை உயர்ந்த புடவைகளை கோவிலில் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யும் போது அளிக்கிறார்கள். அந்தப் புடவைகள் ஒரு காலத்திற்குப் பிறகு கணிசமான தொகைக்கு ஏலம் விடப்படும். அவை பின்பு வேறு ஒருவரின் உடைமையாக இருக்கும். மக்களின் பக்தி ஒரு சாதகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, இதன் மூலமும் கோயில்கள் வருமானத்தை ஈட்டுகின்றன.

பூசாரிகள் பூஜை செய்கிறார்கள் மற்றும் மந்திரங்களைச் சொல்கிறார்கள், அவை பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் உள்ளன, இது இப்போது வாழும் மொழி அல்ல, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள். பக்தர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. பக்தருக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு தொடர்புத் தடை உள்ளது. உண்மையில் கடவுள் சர்வவல்லமையுள்ளவர், இந்த பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறார், கோயில்களில் மட்டும் அல்ல.  கோயில்களைப் போல எந்தத் தடைகளோ அல்லது முகவர்களோ இல்லாமல் உங்கள் மனதிலும் வீட்டிலும் முழு மனதுடன் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் நிச்சயமாக உதவுவார்.

கோயில் என்பது சமத்துவம் இருக்க வேண்டிய இடம், ஆனால் விஐபிக்கள் மற்றும் பணக்காரர்களுக்கு சாதாரண மக்களை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உயர் சாதியினரால் தாழ்ந்த சாதியினர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்கள் இன்றும் பெரும்பாலான கோயில்களுக்குள் நுழைய தடை உள்ளது.



ஏராளமான பணத்தை ஈட்டுவதற்கான  வணிக நிறுவனம் கோவில் என்பதற்கு திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த உதாரணம்.  இளவரசியாக இருந்த தேவி பத்மாவதியை மணப்பதற்காக பகவான் வெங்கடேஸ்வரர் குபேரரிடம் கடன் வாங்கியதாக ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. கடன் தொகை 1.4 மில்லியன் ராமமுத்ரா நாணயங்கள்.  உண்டியலில் சேகரிக்கப்பட்ட தொகை கடனுக்கான வட்டியை செலுத்தப் பயன்படுத்தப்படும் என்றும், கலியுகத்தின் முடிவில் முழு கடன் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் இறைவன் குபேரருக்கு உறுதியளித்தார்.  பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு குபேரருக்கு பணம் செலுத்தப்படுமா? கலியுகம் என்று ஒன்று இருப்பதாக இருந்தாலும் கலியுகம் முடிந்ததும் பணம் உண்மையில் குபேரருக்குச் செல்வதை யார் பார்ப்பார்கள்? யாரிடமும் அதைப் பற்றி எந்தத் தகவலும் இருக்காது. ஏற்கனவே கோவில் தோன்றியதில் இருந்து இந்த பல ஆண்டுகளில் உண்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட மிகப்பெரிய  பணத்தொகை மற்றும் பக்தர்களின் நன்கொடை ஆகியவற்றின் மூலம் கடனை அடைப்பதற்கான பணம் ஏற்கனவே சேகரிப்பு செய்யப்பட்டு விட்டது. மக்கள் இது சில சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்ட கதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே உண்டியலில் நிறைய பணம் போடுவதை நிறுத்துங்கள். 

கொரோனா தொற்றின் போது அனைத்து கோயில்களும் மூடப்பட்டன.  கோவிலுக்குச் செல்வது மிகவும் முக்கியம் என்ற நம்பிக்கைக்கு மாறாக, கோவிலுக்குச் செல்வது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அவசியமில்லை என்பதை மக்களுக்கு இது உணர்த்தியது. கோவிட் காலத்தில் அத்தியாவசியமானவை மளிகைப் பொருட்கள், மருந்துகள், உணவு, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ சேவை போன்றவை மட்டுமே தேவையாக இருந்தது.

கோவிலில் இருப்பது வெறும் சிலை தான், உண்மையான கடவுள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சிலை என்பது கடவுளின்  உருவம் அல்லது உருவகம் மட்டுமே. கோவிலில் நிறைய நேர்மறை மற்றும் மின்காந்த ஆற்றல் உள்ளது என்பது சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான நம்பிக்கை. ஆனால் நாம் நம்பிக்கையுடன் சிந்திக்கும் போதும் மன அமைதியுடன் இருக்கும்போதும் நேர்மறை ஆற்றல் நமக்குள் இருக்கிறது. 

இத்தனை ஆண்டுகளாக அனைத்து கோயில்களிலும்  உண்டியல் மூலம் மொத்தமாக சேகரிக்கப்பட்ட பணத்தினை வறுமையை ஒழிக்கப் பயன்படுத்தி இருக்கலாம்.

கோவில்கள் பெரிய வணிக நிறுவனங்களாக மாறிவிட்டன என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. கோவிலுடன் தொடர்புடைய சிலரின் தனிப்பட்ட நலனுக்காக நிறைய பணம் ஈட்டும் இடமாக ஆலயங்கள் மாறி வருகின்றன.

இந்தப் பதிவு பக்தர்களின் நம்பிக்கையும் பணமும் எவ்வாறு சுயநல  நோக்கத்தில்  ஒரு சிலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கானது.  

இந்த உள்ளடக்கம் கடவுளுக்கோ அல்லது இந்து மதத்துக்கோ எதிரானது அல்ல. மக்கள் உண்டியலில் நிறைய பணம் போடுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் விரும்பினால் சிறிய தொகையை போடலாம்.  பூஜை செய்வதற்கு பூசாரிகளுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துங்கள், ஏனெனில் அவர்கள் சம்பளம் பெறுகிறார்கள். 

மாறாக,  பணத்தை பக்தர்கள் ஏழைகளுக்கு கொடுக்கலாம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், சிகிச்சைக்கான செலவைச் செலுத்த முடியாத நோயாளிகளுக்கும், நலவாழ்வு இல்லங்களுக்கும் மக்கள் பணம் கொடுக்கலாம். இது அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும், அவர்களின் மகிழ்ச்சியான வாழ்த்து உங்களுக்கு கிடைக்கும். அது உங்களுக்கு நன்மை பயக்கும்.  மனிதகுலத்திற்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும் சேவையாகும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்.

நன்றி.
 

Comments