அன்புள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களே,
வணக்கம். அடுத்து என்ன படிக்கலாம் என்பது பல பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் இருக்கும் சிந்தனை ஆகும். இதைப்பற்றி சில பரிந்துரைகளையும் எனது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1. படித்த பிறகு என்ன வேலை அல்லது தொழில் செய்வது என்பது குறித்து மாணவர்கள் ஒரு நோக்கத்தை அமைக்கவும்.
2. 10 ஆம் வகுப்புக்குப் பிறகு, பல டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் அவற்றைத் தேர்வு செய்யலாம். பல வேலை வாய்ப்பு சார்ந்தவை. மாணவர்கள் இந்தப் படிப்பு தங்களுக்கு எளிதானதா, தங்கள் இலக்கை அடைய உதவுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இதைச் சரிபார்க்க வேண்டும். கல்லூரிக்குப் பிறகு முதுகலை டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
10 ஆம் வகுப்புக்குப் பிறகு 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் (ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ) உள்ள முக்கிய பாடப்பிரிவுகள்:
1. அறிவியல் பிரிவு
யார் இதைத் தேர்வு செய்ய வேண்டும்: தொழில்நுட்பம், மருத்துவம், இஞ்சினியரிங், ஆராய்ச்சி, உயிரியல், தாவரவியல், விலங்கியல், இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால்.
பாடங்கள்: இயற்பியல், வேதியியல், கணிதம் (PCM) / உயிரியல் (PCB) / இரண்டும் (PCMB)
அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் (Pure Science)
தொழில் பாதைகள்:
பொறியியல் (B.Tech, B.E.)
மருத்துவம் (MBBS, BDS, முதலியன)
ஆராய்ச்சி விஞ்ஞானி, உயிரி தொழில்நுட்பம், தரவு அறிவியல்
பிற தொழில்கள்: பைலட், தடயவியல் விஞ்ஞானி
2. வணிக பிரிவு
யார் இதைத் தேர்வு செய்ய வேண்டும்: வணிகம், நிதி, பொருளாதாரம் அல்லது மேலாண்மை ஆகியவற்றில் நீங்கள் ஆர்வமாக இருந்தால்.
பாடங்கள்: கணக்கியல், வணிகப் படிப்புகள், பொருளாதாரம், கணிதம் (விரும்பினால்)
தொழில் பாதைகள்:
பட்டய கணக்காளர் (CA), நிறுவனச் செயலாளர் (CS)
B.Com, BBA, MBA
பொருளாதார நிபுணர், வங்கியாளர், நிதி ஆய்வாளர், தொழில்முனைவோர்
3. கலை / மனிதநேயப் (Humanities) பிரிவு
யார் அதைத் தேர்வு செய்ய வேண்டும்: நீங்கள் சமூக அறிவியல், இலக்கியம், தத்துவம், வரலாறு அல்லது படைப்புத் துறைகளில் ஆர்வமாக இருந்தால்.
பாடங்கள்: வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், இலக்கியம்
தொழில் பாதைகள்:
UPSC/சிவில் சர்வீசஸ், சட்டம், பத்திரிகை, கற்பித்தல்
வடிவமைப்பு, எழுத்து, சமூகப் பணி, வெளிநாட்டு மொழிகள்
💼 தொழில் மற்றும் திறன் சார்ந்த படிப்புகள்
பாலிடெக்னிக் டிப்ளோமாக்கள் (பொறியியல், ஃபேஷன் வடிவமைப்பு, உள்துறை வடிவமைப்பு போன்றவை)
ITI (தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள்)
பாராமெடிக்கல் படிப்புகள்
அனிமேஷன், கிராஃபிக் வடிவமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங்
ஹோட்டல் மேலாண்மை
🎨 படைப்புத் துறைகள் (முறையான ஸ்ட்ரீமுடன்/இல்லாமல்)
கலை, நிகழ்த்து கலைகள்
வடிவமைப்பு (NID, NIFT, போன்றவை)
திரைப்படம் மற்றும் ஊடகம்
கட்டிடக்கலை (PCM தேவை)
3. பிளஸ் ஒன் மற்றும் இரண்டில் படிக்க வேண்டிய குரூப்பை தேர்வு வேண்டும், இது இலக்கை அடைய உதவும் பாடங்களைக் கொண்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
4. தேர்ந்தெடுத்கும் பாடங்கள் மாணவர்கள் கற்றுக்கொள்ள வசதியாக இருக்கிறதா என்று பாருங்கள். ஏனெனில் மாணவருக்கு கடினமான பாடங்களைத் தேர்ந்தெடுப்பது படிக்க சிக்கலாக இருக்கும்.
5. கல்லூரியில் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு பிளஸ் டூவில் படித்த குரூப் தகுதியானதா என்று சரிபார்க்கவும்.
மீன்வளம், கால்நடை அறிவியல், தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், வேளாண் பொறியியல், கிராஃபிக் வடிவமைப்பு, காட்சி தொடர்பு, நுண்கலை, தரவு அறிவியல் போன்ற சில படிப்புகளை உதாரணமாக சொல்லலாம்.
6. மிக முக்கியமாக, மாணவர் அதிக போட்டி நிறைந்த மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு சேர்க்கை பெறாவிட்டால் கவலைப்பட வேண்டாம், உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான மற்றொரு படிப்பை தேர்வுசெய்து அந்த பாதையில் முன்னேறவும். யாருக்குத் தெரியும், அந்த படிப்பு உங்களுக்கு இன்னும் சிறப்பாக இருக்கலாம்.
7. பெற்றோருக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து குழந்தைகளை நீங்கள் விரும்புவதைப் படிக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம், மாறாக அவர்கள் விரும்புவதைப் படிக்க ஊக்குவிக்கவும். பெற்றோரின் மிக முக்கியமான பங்கு என்பது அவர்களுக்கு வழிகாட்டவும் பின்வருவனவற்றை உறுதி செய்வதும் ஆகும்.
பெரும்பாலான ஊர்களில் தேர்ந்தெடுத்த படிப்பிற்கு போதுமான வேலை வாய்ப்பு உள்ளதா?
மாணவர்கள் இடமாற்றம் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் வசிக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்தவும்.
மாணவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ( work from home ) விரும்பினால் அதற்கு ஏற்ற படிப்பும் பிறகு அது சம்பந்தமான வேலையும் உள்ளதா என்று பாருங்கள்.
எல்லாம் பொருத்தமாக இருந்தால் சிறப்பாக கல்வி பயின்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நீங்கள் இதை விரும்பினால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.
Comments
Post a Comment